அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.
அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று பிப்ரவரி 21 வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பாஜக மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொது செயலாளர் சீதாராமன், பொருளாளர் ராமஜெயம், செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், நகர தலைவர் முருகானந்தம், நகர பொதுச் செயலாளர் பாண்டி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட விவசாய அணி தலைவர் அழகர்சாமி, நெசவாளர் அணி மாநில செயலாளர் தினேஷ்,
மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் பிரித்திவிராஜ் மற்றும் பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.