பாளையம்பட்டியில் 5ஆண்டுகளுக்கு பின்பு கோவில் தேர்வெள்ளோட்டம்

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமையான ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. ‌ இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி வசந்த விழாவில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் தேர் பழுது ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறவில்லை. பிரசித்தி பெற்ற இந்த தேரோட்ட நிகழ்ச்சி மீண்டும் நடைபெறுவதற்காக தேர் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார். கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலசம் தேரில் வைக்கப்பட்டு தேரோடும் வீதிகள் வழியாக இந்த தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்று இறுதியாக தேர் நிலையை அடைந்தது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின் இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி சுற்றுவட்டார பதிவு சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 40 அடி உயர மிகப்பெரிய தேர் பாளையம்பட்டி தேர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி