விஜய் அஜித்துக்கு முந்தைய தலைமுறை நடிகர்கள், பெண்கள் விஷயத்தில் தாங்கள் ஒழுக்கமானவர்கள் என்று சொல்வார்களா என லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மலையாள திரையுலகில் நடிக்க வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், தமிழ்த்திரை உலகிலும் பெண்கள் மீதான வன்கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.