விழுப்புரம் எஸ். பி. அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று(அக்.2) மாலை 5: 30 மணிக்கு திடீரென முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் விசாரித்ததில், பெரும்பாக்கம், மாம்பழப்பட்டு, ஒட்டன்காடுவெட்டி, நத்தமேடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியிடம் தீபாவளி மாதச்சீட்டு கட்டியுள்ளனர்.
சீட்டு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் பெரும்பாலானோருக்கு முதிர்வு பணம் தராமல் ஏமாற்றியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, பணத்தை ஏமாற்றிய நபர்களை கைது செய்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.