விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ், கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.