சீந்தில் 100 கிராம், வேப்பம் பிசின், துளசி விதை, சுக்கு, ஏலக்காய், ஆவாரம்பூ ஆகியவை தலா 20 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்றாக உலர்த்தி பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கிளாஸ் தண்ணீரில் அரை ஸ்பூன் இந்த பொடியை போட்டு கொதிக்க விடவும். 100 மில்லி அளவு வற்றிய பிறகு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இந்த தேநீர் குடித்த பிறகு 45 நிமிடங்களுக்கு வேறு எந்த பொருளும் சாப்பிடக்கூடாது.