இளம் வயதில் ஏற்படும் நரைமுடி பிரச்சனைக்கு ஃபோலிக் ஆசிட், இரும்பு சத்து, ஜிங்க், செலினியம் ஆகியவற்றின் குறைபாடுதான் காரணம். வைட்டமின் பி12 குறைபாடு இருப்பவர்களுக்கும் நரைமுடி ஏற்படுகிறது. பி12 குறைபாடு இருப்பவர்கள் வாரத்தில் 50 முதல் 100 கிராம் வரை ஈரல் எடுத்துக் கொள்ளலாம். ஈரலில் இருந்தே செலினியம் போன்ற சத்துக்களும் கிடைத்துவிடும். ஃபோலிக் ஆசிட் குறைவாக இருப்பவர்கள் பச்சைக் கீரைகள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும்.