நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இன்று (டிச.15) கிருஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் அட்டகாசமான உடையில் தோன்றிய கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் ஆண்டனி லிப் லாக் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.