கர்நாடகாவின் தண்டேலி பகுதி 'ஒயிட் வாட்டர் ராஃப்டிங்' என்னும் சாகச விளையாட்டுக்குப் பெயர் பெற்றது. இங்கு உள்ள காளி ஆற்றில் இந்த விளையாட்டு 12 கி.மீ தூரம் வரை நடத்தப்படுகிறது. இது சுமார் 3-4 மணி நேரம் வரை நீடிக்கும். ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.900 முதல் ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உயிர் காக்கும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதற்கு தனியார் ரிசார்ட்டுகள், ஆன்லைன் போர்ட்டல்கள் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.