மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
டிசம்பர் 3 இயக்கம் புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் குவிந்த மாற்றுத் திறனாளிகள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
டி. ஆர். ஒ. , பரமேஸ்வரி மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பின், அவர்களிடமிருந்து கோரிக்கையை மனுவாக பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.