அமைச்சர் பொன்முடி பிரச்சாரம்

85பார்த்தது
அமைச்சர் பொன்முடி பிரச்சாரம்
விக்கிரவாண்டி தொகுதி காணை மத்திய ஒன்றியத்தில் வி. சி. கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி ஓட்டு சேகரித்தார்.

விழுப்புரம் லோக் சபா (தனி)தொகுதிகுட்பட்ட விக்கிரவாண்டி சட்ட சபை தொகுதி காணை ஒன்றியம் கஞ்சனுாரில் நேற்று காலை வி. சி. கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு , அமைச்சர் பொன்முடி பானை சின்னத்தில், மக்களிடம் தமிழக அரசின் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளை கூறி ஓட்டு சேகரித்தார்.

கவுதம சிகாமணி எம். பி. , மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், வி. சி. , மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, தி. மு. க. , ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், மாவட்ட கவுன்சிலர் முருகன், ஒன்றிய சேர்மன் கலைச் செல்வி, துணை சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பாலமுருகன் , சாந்தி , சிவராமன், பூவராகவன், பழனி, கர்ணா, ராமலிங்கம், செல்வராஜ், ஏழுமலை, சரவணன், மாவட்ட வர்த்தக அணி வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, கதிரவன், ராகுல்உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி