ஓமன் கப்பல் விபத்து- 8 இந்தியர்கள் மீட்பு

50பார்த்தது
ஓமன் கப்பல் விபத்து- 8 இந்தியர்கள் மீட்பு
ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் 8 இந்தியர்கள், ஒரு இலங்கையை சேர்ந்தவர் என 9 கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 'பிரஸ்டீஜ் ஃபால்கன்' என்ற கப்பல், ஓமனின் தொழில்துறை துறைமுகம் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமானதாக, ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்திருந்த நிலையில், 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என ஓமனுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி