விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் துாய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த முகாமை செயல் அலுவலர் ஷேக் லத்தீப் தலைமை தாங்கி இன்று துவக்கி வைத்தார். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார்.
விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் மருத்துவக் குழுவினர் துாய்மைப் பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தனர். சுகாதார ஆய்வாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமார், மேற்பார்வையாளர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.