உ.பி: அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த பெண் பக்தர் குளிக்கும்போது படம்பிடித்த கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் கைது செய்யப்பட்டார். கெஸ்ட் ஹவுஸ் குளியறையில் 30 வயது பெண் பக்தர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த விடுதியின் சமையல்காரர் சௌரப் ரகசியமாக அவரை படம்பிடித்துக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக சிக்கினார். இதைத்தொடர்ந்து, போலீசார் சௌரப்பிடம் நடத்திய விசாரணையில் அவரின் மொபைல் போனில் 10 ஆபாச வீடியோக்களைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.