மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் செல்போனை தாய் பிடுங்கியதால், 11 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி அடிக்கடி செல்போன் பார்த்துவந்துள்ளார். இதனால், அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கிய தாய், சிறுமியை திட்டியுள்ளார். இதனால், விரக்தியடைந்த சிறுமி, தனது தாயும், மூத்த சகோதரியும் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.