விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செங்கேணி, 110; இவர், தனது மகன்களுடன் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக கண் பார்வை குறைபாடு இருந்தது.
கடந்த 18ம் தேதி பிற்பகல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குளிர்பானம் என நினைத்து குடித்தவர் மயங்கி விழுந்தார்.உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.