ரேஷன் கடையை திறந்து வைத்த ஒன்றிய சேர்மன்

81பார்த்தது
ரேஷன் கடையை திறந்து வைத்த ஒன்றிய சேர்மன்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில் 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா இன்று நடந்தது. விழாவிற்கு, ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கண்டமங்கலம் பி. டி. ஓ. , கள் மணிவண்ணன், சிவக்குமார், ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய சேர்மன் வாசன் ரேஷன் கடையை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார். தி. மு. க. , ஒன்றிய துணைச் செயலாளர் குமணன், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் புருஷோத்தமன், நெசவாளர் அணி அமைப்பாளர் ரஜினி, நிர்வாகிகள் பாரத், வடமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி