திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்கபூபதி செவிலியர் கல்லுாரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து உணவு கண்காட்சி இன்று(செப்.30) நடந்தது. கண்காட்சியில், செவிலியர் வகுப்பு மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
கல்லுாரி முதல்வர் மேனகாகாந்தி வரவேற்றார். தாளாளர் ரங்கபூபதி முகாமை துவக்கி வைத்து, ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதில் சிறந்த உணவு தயாரித்திருந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் மாலதி நன்றி கூறினார்.