சின்னத்திரையில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பயணம் தொடங்கியது. கடந்த 2012-ல் 'மெரினா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். தன் இயல்பான நடிப்பாலும், யதார்த்த பேச்சினாலும் மக்கள் மனதில் விரைவாக இடம்பிடித்தார் சிவகார்த்திகேயன். குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள அவர் இன்று (பிப். 17) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.