மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மா. கம்யூ. , வானூர் வட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன், மாவட்டக்குழு உறுப்பினர் அர்ஜூனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், சேகர், சுந்தரமூர்த்தி, மாயவன், அன்சாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தரப்பு மக்களையும், பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதம் தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறத்தப்பட்டன.