மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க செயற்பொறியாளர் வேண்டுகோள்

56பார்த்தது
மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க செயற்பொறியாளர் வேண்டுகோள்
கண்டமங்கலம் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் சிவகுரு இன்று செய்தி குறிப்பிடு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதி எண். 14ன் படி ஒரு மின் நுகர்வோர் தங்களுக்கு மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால் அடுத்த 15 நாட்கள் மின் கட்டணம் செலுத்த நோட்டீஸ் காலமாகும்.

இங்கு நோட்டீஸ் என்பது தங்களது வெள்ளை மின் கட்டண அட்டையில் மின் கட்டண விவரங்களை குறிப்பதாகும். அதாவது மின் கணக்கீடு செய்த நாளிலிருந்து 20 நாட்கள் வரையிலும் மின் கட்டணம் செலுத்தலாம். 21ம் நாள் அல்லது அடுத்த வேலை நாளில் மேலும் அறிவிப்பின்றி மின் துண்டிப்பு செய்யப்படும். செலுத்த தவறிய மின் கட்டணத்திற்கு தங்களது மின் கட்டண தொகையில் 1. 5 சதவீதம் வசூலிக்கப்படும். மேலும் இதனுடன் மறு மின் இணைப்பு கட்டணமும் சேர்த்து வசூல் செய்யப்படும்.

மின் கட்டண விவரங்கள் எங்களது வலை தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகிறது. தங்களது சரியான கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து, மின் கட்டண விவரங்களை உடனுக்குடன் முழுமையாக அறிந்து, 2 மாதங்களுக்கு ஒரு முறை கெடு தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி