விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி, பழைய ஆரோவில் சாலையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ. 42. 50 லட்சம் மதிப்பீட்டில் அமையுள்ள மறுசுழற்சி மையம், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் ரூ. 1. 25 கோடியில் அமைக்கப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றை ஆட்சியா் பழனி நேற்று (செப்.,25) ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராஜா, வானூா் வட்டாட்சியா் நாராயணமூா்த்தி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையா் புஹேந்திரி, பொறியாளா் ரவிக்குமாா், விக்கிரவாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குலோத்துங்கன், பாலச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.