பெண்கள் முன்னேற்றத்துக்காக, ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தில் கணவனை இழந்த விதவைகளின் மகள் திருமணத்தின்போது இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து திருமண நிதியுதவி பெறலாம். இதனை, இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்கு ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு கிடைக்கும். பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு கிடைக்கும்.