விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி தேன்மொழி (65) இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது. பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த தேன்மொழி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.