குலுக்கல் சீட்டு பணம் மோசடி எஸ்.பி. அலுவலகத்தில் மனு

79பார்த்தது
குலுக்கல் சீட்டு பணம் மோசடி எஸ்.பி. அலுவலகத்தில் மனு
விழுப்புரத்தில் வீட்டுமனை தருவதாகக் கூறி குலுக்கல் சீட்டு பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ். பி. , அலுவலகத்தில் இன்று(செப்.29) புகார் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்களிடம், திருக்கோவிலுார் என். ஜி. ஜி. ஓ. , நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் மாதம் தோறும் 2, 500 ரூபாய் குலுக்கல் சீட்டு பணம் செலுத்தினால் வீட்டு மனை தருவதாக கூறினார்.

இதை நம்பி நாங்கள், 13 பேர் கடந்த 5 ஆண்டுகளாக பணம் செலுத்தினோம். முழு பணத்தை கட்டி முடித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை எங்களுக்கு வீட்டு மனை வழங்கவில்லை. திருக்கோவிலுார் சென்று அந்த நபரிடம் வீட்டுமனை தொடர்பாக கேட்ட போது, எங்களை ஏமாற்றி வருகிறார். எங்களை ஏமாற்றி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி