பா. ம. க. , நிர்வாகி மீது வழக்கு

1875பார்த்தது
பா. ம. க. , நிர்வாகி மீது வழக்கு
விழுப்புரம் அருகே தேர்தல் விதிகளை மீறி, கட்சி கொடி, தோரணங்களை கட்டியதாக பா. ம. க. , ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த கண்டமானடி கிராமத்தில், பா. ம. க. , வேட்பாளர் முரளிசங்கர் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அந்த கிராமத்தில், பொது இடங்களில் பா. ம. க. , மற்றும் பா. ஜ. , கூட்டணி கட்சி கொடி மற்றும் தோரணங்களை, பா. ம. க. , வினர் கட்டியிருந்தனர்.

இது குறித்து, சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் அளித்த புகாரின் பேரில், அந்த பகுதியைச் சேர்ந்த பாமக கோலியனூர் ஒன்றிய செயலாளர் முருகன், 43; மீது, விழுப்புரம் தாலுகா போலீசார், தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிந்தனர்.

தொடர்புடைய செய்தி