திருவெண்ணெய்நல்லுார் காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளியில் என். எஸ். எஸ். , துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, ஊராட்சி தலைவர் கோபாலசுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் குமார் வரவேற்றார். நாட்டு நலப்பணி முகாமிட்டுள்ள மாணவர்கள் அப்பகுதியில் உள்ள பொது இடங்கள் சீரமைப்பது, மரங்களை பராமரிப்பது, மரங்களுக்கு ஊரமிடுதல், புதிதாக மரக்கன்றுகள் நடுதல், குளங்களை துார்வாருதல் போன்றவற்றை செயல்விளக்கம் அளித்தனர். ஆசிரியர் யுகபதி நடராஜன், திட்ட அலுவலர் அருண், உதவி திட்ட அலுவலர் கோபிநாத் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.