விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று டீ. புதுப்பாளையம் மற்றும் ஆனத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மது பாட்டில் விற்பனை செய்த பழனிவேல் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து பத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.