திண்டிவனம் அருகே ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் கோனேரிக்குப்பம் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திரவுபதி அம்மன் கோவில் அருகில் 3 பேர் சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே, போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 35), ஏழுமலை (43) சிவக்குமார் (43) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைய டுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.