கேரளா: திருவனந்தபுரத்தில் வினீத் (35) என்பவர் போலீஸ் கமாண்டோவாக பணிபுரிந்து வந்தார். இவரின் மனைவி கர்ப்பமாக இருக்கும் சூழலில் அவரை அருகில் இருந்து கவனித்து கொள்ள வினீத் விரும்பினார். ஆனால் அவருக்கு உயர் அதிகாரிகள் விடுப்பு வழங்காமல் இருந்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வினீத் கடந்த ஞாயிறு (டிச. 15) இரவு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.