லயன்ஸ் மற்றும் வாசவி சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

73பார்த்தது
லயன்ஸ் மற்றும் வாசவி சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
திண்டிவனத்தில், கண், காது, தொண்டை தொடர்பான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் கிளப், மெட்ராஸ் இ. என். டி. , ரிசர்ச் பவுண்டேஷன், ராம் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் வாசவி பள்ளியில் நடந்த நேற்றைய (செப் 28) முகாமிற்கு, ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் மணிமேகலை, சந்தானம் முகாமை துவக்கி வைத்து பேசினர். முகாமை பள்ளி தாளாளர்கள் ரங்கமன்னார், வெங்கடேசன் துவக்கி வைத்தனர்.

அரிமா சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் ரஜிகா ராமகிருஷ்ணன், மஞ்சு பார்கவி ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
பொருளாளர் நவநீதம் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி