மினி வேன் மோதி தொழிலாளி பலி

2115பார்த்தது
மினி வேன் மோதி தொழிலாளி பலி
திருவெண்ணெய்நல்லுார் அருகே மினி வேன் மோதி முதியவர் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 56; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி மாலை சைக்கிளை தள்ளிக் கொண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த மினி வேன் கண்ணன் மீது மோதியது. படுகாயமடைந்த அவர், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் மதியம் இறந்தார். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி