நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நகராட்சியை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நகரத்தின் ஒட்டு மொத்த நிலத்தடி நீராதாரத்தை பாதிக்கும் SSS அக்வா ஃபார்ம் என்ற புதிய மினரல் வாட்டர் கம்பெனியின் சட்டவிரோத அனுமதியை ரத்து செய்ய கோரியும், கம்பெனிக்கு துணை போகும் மின் துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், காவேரிப்பாக்கம் ஏரிக்கு சலவாதி கலிங்களில் இருந்து நீரோடை வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தில் நகரும் மின் படிக்கட்டு அமைத்திட கோரியும், திண்டிவனம் நகரத்தின் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து, தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்து தர கோரியும், திண்டிவனம், செஞ்சி ரோட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் 2 அரசு மதுபான கடைகளை மூடக் கோரியும், 23 வது வார்டு நல்லியக்கோடன் நகரில் உடைந்த நிலையில் உள்ள பாலத்தை சரி செய்ய கோரியும், நகரின் பல பகுதிகளில் மலை போல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை முறையாக செய்திட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டத் தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.
சந்திரசேகர், சுப்பிரமணி, ராமலிங்கம், பார்த்திபன், மணிகண்டன், மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலாளர் பழனி கண்டன உரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி