விழுப்புரம் மாவட்டத்தில் 49 காவல் நிலையங்கள் உள்ளது. இந்த காவல் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்களுக்கு 49 அரசு, பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் இன்ஸ்பெக்டர்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் மட்டுமின்றி அம்பாவிதம் நடைபெறும் இடங்களுக்கும், ரோந்து செல்லவும் பயன்படுத்துகின்றனர். காவல் துறை சார்பில் மாதம் தோறும் 240 லிட்டர் டீசல் நிரப்புவதற்கான தொகை வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு மாதத்தில் அரசு வாகனங்களில் சென்று பணி செய்வதற்கு, 400 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. 1200 கி. மீ. , வரை ஒரு மாதத்திற்கு வழங்கும் டீசல் பணம் போதவில்லை என்றும், 2500 கி. மீ. , வரை செல்வதற்கான டீசல் பணத்தை வழங்கக் கோரி, இன்ஸ்பெக்டர்கள் பல முறை எஸ். பி. , க்கு மட்டுமின்றி, உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதற்கான நடவடிக்கைகள் ஏதுமில்லாததால், இன்ஸ்பெக்டர்கள் கிராம பகுதிகளுக்கு வாகன சோதனைக்கு கூட செல்ல முடியாமல் தங்களின் சொந்த பணத்தை செலவிடுவதோடு, வெளியேயும் சொல்ல முடியாமல் இன்ஸ்பெக்டர்கள் மட்டுமின்றி வாகனத்தை ஓட்டும் டிரைவர்களும் புலம்புகின்றனர்.