அக்னி வசந்த பெருவிழா ஒன்பதாம் நாள் உற்சவம்

75பார்த்தது
திண்டிவனம் அடுத்த இரட்டணை திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த பெருவிழாவின் ஒன்பதாம் நாள் உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு திரவுபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த பெருவிழாவின் முதலாவது நாள் துவஜாரோகனம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் அம்மன் முற்பிறப்பும், நளாயினி வரலாறும் என்ற ஆன்மீக சொற்பொழிவும், நாடகமும் நடைபெற்றது. இரவு திரௌபதி அம்மன் சமேதராய் தர்மராஜ சுவாமி மலங்கால் அலங்கரிக்கப்பட்டு மின் விளக்குகளால் ஆன சப்பரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி