நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கியுள்ளார். நான் காங்கிரஸில் இருந்தபோது டெல்லியில் நடிகர் விஜயிடம் கட்சி தொடங்க வேண்டும் என ராகுல் கூறினார். அதனால், வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.