செஞ்சி கே. எஸ். ராஜா கல்லூரியில் விளையாட்டு தின விழா

84பார்த்தது
செஞ்சி கே. எஸ். ராஜா கல்லூரியில் விளையாட்டு தின விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செல்லப்பிராட்டியில் உள்ள கே. எஸ். ராஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக செஞ்சி பஸ் நிலையத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி மாணவிகள் ஊர்வலமாக கல்லூரிக்கு வந்தனர். இந்த ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டு ராஜா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரியில் நடந்த விழாவுக்கு கல்லூரியின் செயலாளர் பாக்கியஸ்ரீ தலைமை தாங்கினார். முதல்வர் சுசிந்திரன், கல்லூ ரியின் இயக்குனர் லோகஸ்ரீ, நிர்வாக இயக்குனர் நித்யஸ்ரீ ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் துறை உதவி பேராசிரியை கோமதி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக யோகா பேரா சிரியர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் துறை உதவி பேராசிரியை தமிழரசி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி