விஜயகுமாரின் ‘எலெக்‌ஷன்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..

82பார்த்தது
விஜயகுமாரின் ‘எலெக்‌ஷன்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..
தமிழ் சினிமாவில் உறியடி படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் விஜயகுமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பைட் கிளப்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘எலெக்‌ஷன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ரீல் குட் பிலிம்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘எலெக்‌ஷன்’ திரைப்படம் வருகிற மே 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி