மறைந்த விஜயகாந்த் தலைமையில், தமிழ் நடிகர்களை வைத்து ‘நட்சத்திர கலைவிழா’ நடத்தப்பட்டது. மலேசியாவில், நடிகர்கள் தங்கி இருந்த ஹோட்டல் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியுள்ளனர். சிங்கப்பூருக்கு செல்ல இருந்ததால், நடிகர்கள் ஒருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, நடிகை மீனாவிடம் ரசிகர்கள் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்த விஜயகாந்த் அந்நபரின் தலையில் அடித்து ரத்தம் வரவைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, பிரபல தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.