திமுக ஆட்சியில் 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகமான நெல் சேமிப்புக் கிடங்குகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. இதற்காக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கியுள்ளது. வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.