ஆரவல்லி மலைத்தொடரின் மேற்கே ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் நாக் பஹார் மற்றும் நாகா மலைகளில் இருந்து உருவாகும் மிகப்பெரிய நதி தான் லூனி. புஷ்கர் பள்ளத்தாக்கில் உருவாகி தார்பாலைவனத்தின் தென்கிழக்கில் 495 கி.மீ தூரம் பயணித்த பிறகு ரான் ஆஃப் கட்ச் சதுப்பு நிலத்தில் முடிவடைகிறது. இந்த நதி இந்தியாவின் உள் வடிகால் ஆறுகளில் ஒன்றாகும். இது அரபிக் கடலை சந்திப்பதற்கு முன்பே வடிகட்டப்படுகிறது. எனவே இந்த நதி கடலில் கலக்காத ஒரே நதியாக அறியப்படுகிறது.