திமுக தண்ணீர் பந்தலில் குளிர்பானம் கொடுத்த விஜயபாஸ்கர்

68பார்த்தது
திமுக தண்ணீர் பந்தலில் குளிர்பானம் கொடுத்த விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் திமுக சார்பில் அமைச்சர் மெய்யநாதன் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். அங்கு திமுக சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதே பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்எல்ஏ இன்று (மே 15) வருகை தந்திருந்தார். பின்னர் பொது மக்களுக்கு குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் திமுகவினர் அமைத்திருந்த நீர் மோர் பந்தலுக்கு சென்று அங்கிருந்த திமுகவினருக்கு குளிர்பானங்களை கொடுத்து படம் எடுத்துக் கொண்டார். இப்போது அந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி