‘முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் மம்தா’ - அமித்ஷா

64பார்த்தது
‘முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் மம்தா’ - அமித்ஷா
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (மே 15) மேற்கு வங்காளத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்துக்களுக்கு ஆதரவாக இருப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர். ஆனால், தற்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி