‘சீக்கிரம் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்’ - உதயகுமார்

58பார்த்தது
‘சீக்கிரம் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்’ -  உதயகுமார்
தென்மேற்குப் பருவமழைக்கு முன்பு நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என இன்று (மே 15) அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் 10 ஆயிரம் தடுப்பு அணைகளைக் கட்டுவோம் எனக் கூறிய திமுக அரசு தற்போது அதனை செய்யவில்லை. பருவமழை மூலம் கிடைக்கும் உபரிநீரை உயிர்நீராக ஏரி, குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். ஆகவே பருவமழை வருவதற்கு முன்பாகவே அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி