வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் காமராஜர் பிரிவில் சாலை அமைக்க முயன்ற போது நித்தியானந்தம் என்பவரை நான் தாக்கியதாக கூறும் புகார் பொய்யானது என வேலூர் மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தம் தான் ஜேசிபி இயந்திர ஓட்டங்களை தாக்கியுள்ளார். நான் அந்த பிரச்சனை முடிந்த பிறகு தான் அங்கு சென்றேன். அரசியல் உள்நோக்கம் காரணமாக அதிமுக பிரமுகரான நித்தியானந்தம் இது போன்று செய்கிறார். தொடர்ந்து இதுபோன்று பிரச்சனை செய்து வருகிறார். புகார் கொடுத்துள்ளார். வேலூர் மாநகராட்சியில் சாலை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
பாதாள சாக்கடை பணி தாமதமாக காரணமே அதிமுக தான். அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் எடுத்தவர் பணியை செய்யாமல் உள்ளனர். இப்போது நாங்கள் தான் பணியை செய்து வருகிறோம் என்று கூறினார்.