வேலூர் மத்திய சிறை கூடுதல் எஸ். பி மாற்றம் - டிஜிபி உத்தரவு!

72பார்த்தது
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, திருட்டில் ஈடுபட்டதாக சிவகுமார் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலீசார் வேலூர் சிறைத்துறை டி. ஐ. ஜி ராஜலட்சுமி, வேலூர் மத்தியசிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சேலம் மத்திய சிறையில் உள்ள கைதி சிவகுமாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், நேற்று வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவகுமார் உடன் இருந்த சக கைதிகள், சிறை மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமானை புழல் சிறைக்கு பணியிட மாற்றம் செய்தும், புழல் சிறை கண்காணிப்பாளராக இருந்த பரசுராமனை வேலூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக நியமனம் செய்தும் தமிழக சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி