இளைஞரை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற நபர்!

70பார்த்தது
வேலூர் மாநகர் வசந்தபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (25). இவர் மீது பல்வேறு வேலூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் (32) என்பவரின் மனைவி செல்போனை திருடியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பாண்டியன் ஜெயபிரகாஷ்யிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதில் இருவருக்கும் வாக்குவாம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாண்டியன் ஜெயபிரகாஷை பீர்பாட்டில் மற்றும் கல்லால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாண்டியனை தேடி வருகின்றனர். பாண்டியன் பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்றும், இவர் மீது பாண்டிச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி