வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கீழ்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்( 50) என்பவர் தனது மகன் சந்தோஷ் மற்றும் அண்ணன் குமார் ஆகியோருடன் டிராக்டர்களில் தொடர்ந்து மணல் கடத்துவதாக வந்த புகாரையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கடந்த 4 ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது டிராக்டர்களில் மணல் கடத்திக் கொண்டு வந்த வெங்கடேசன் சந்தோஷ், குமார், ஆகிய 3 பேரும் போலீசாரை கண்டவுடன் டிராக்டர்களை விட்டுவிட்டு தப்பியோட முயன்றனர்.
அப்பொழுது வெங்கடேசனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் சந்தோஷ், குமார் ஆகியோர் போலீசாரை தாக்கி தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் பேர்ணாம்பட்டு போலீசார் மற்றும் மேல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கடேசனை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். போலீசாரை தாக்கி தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வெங்கடேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கக் கோரி வேலூர் எஸ்பி மதிவாணன் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் வெங்கடேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.