அரசு பெண்கள் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி!

69பார்த்தது
அரசு பெண்கள் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வேலூர் தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி கமிஷனர் ஜானகி அறிவுறுத்தலின்பேரில் தூய்மை பாரத இயக்கம் 2. 0 என்ற தலைப்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், மாணவிகள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என்று தனித்தனியாக வழங்க வேண்டும். தெருவோரம், மழைநீர் கால்வாய், கானாறுகளில் குப்பைகளை கொட்ட கூடாது. வீடு மற்றும் பொது இடங்களில் கழிவறைகளை சுத்தமாக வைத்து கொள்வது அனைவரின் கடமையாகும்.

டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மாணவிகள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் சுகாதார உறுதிமொழி ஏற்றனர். இதில் தூய்மை பாரத இயக்க மேற்பார்வையாளர் ஹரிஷ், சுகாதார மேற்பார்வையாளர் ஜெயராமன் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி