வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023_24 கல்வியாண்டில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். தேர்வு எழுதாத இடைநிலை மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் "உயர்வுக்கு படி" நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் சுபலட்சுமி குடியாத்தம் நடுபேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று(செப்.11) துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயம், குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா மற்றும் இதில் பலரும் கலந்து கொண்டனர்.